யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் எஸ். ஸ்ரீசற்குணராஜா!

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தராக தற்போதைய தொழில் நுட்ப பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எஸ்.ஸ்ரீசற்குணராஜா ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவரது நியமனம் தொடர்பான அறிவுறுத்தல்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலும் இன்று இது பற்றிய உத்தியோக பூர்வ அறிவித்தல் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Posts