யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு 2300 பேர் உள்வாங்கல்

கடந்த 2015 ம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றிய 2305 மாணவர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

இந்த வருடம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களின் அனுமதிக்காக இதுவரை 1118 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.

ஆனால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்ட எண்ணிக்கை 2305 ஆக உள்ளது.

ஆகவே இந்த வருடம் மிகப்பெரிய எண்ணிக்கையான மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கப்படவுள்ளனர்.

2,305 மாணவர்களில் 1,118 மாணவர்களே பதிவு செய்துள்ளனர்.

மீதமுள்ள மாணவர்கள் பதிவு செய்யாது இருப்பதற்கு காரணம் விஞ்ஞான பீடம் மற்றும் கலைப்பீட மாணவர்களுடைய பதிவு ஆரம்பிக்கப்படாமையே ஆகும்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விளையாட்டு பிரிவிற்காக உடற்பயிற்சிக் கூடம் ஒன்று அமைக்கப்படவுள்ளது.

இதன் கட்டுமானப் பணிகள் இந்த வருட இறுதிக்குள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

மேலும் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பிரிவிற்கான சிகிச்சை நிலைய கட்டடம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளது.

இதற்கான கட்டட வேலைகள் மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

வவுனியா வளாகத்தில் பிரையோக விஞ்ஞான பிரிவினுடைய கட்டட பணிகளும் நடைபெற்று வருக்கின்றன.

இந்திய அரசின் உதவியுடன் பொறியல் பீடம் மற்றும் விவசாய பீடத்திற்குமான கட்டடப் பணிகள் பெப்ரவரி மாதம் அளவில் முற்றாக முடிவுற உள்ளன.

அதேபோல் ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கை மதிப்பில் 2410 மில்லியன் செலவில் விவசாய பீடத்திற்கு கிறான்ட் ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Posts