யாழ்ப்பாண நகரை ஒரு மாதத்திற்குள் சுத்தப்படுத்துமாறு வடமாகாண ஆளுநர் ரொஜினோல்ட் குரே அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
வடமாகாணத்தில் டெங்கு நோய் அச்சுறுத்தல் தலைதூக்கியுள்ளதைத் தொடர்ந்து ஆளுநர் இந்த பணிப்புரையை வழங்கியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் வடிகான் கட்டமைப்புக்களும், நீர்த்தேக்கங்களும் முறையான தராதரத்துடன் பாராமரிக்கப்படுவதில்லை என்று தெரிய வந்துள்ளது.
யாழ் நகரின் அழகை தொடர்ந்தும் பேணுவதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார். கடந்த மூன்று மாதங்களில் டெங்கு நோயாளர்கள் என சந்தேகிக்கப்படும் 26 பேர் இனங்காணப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.