யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி ஆரம்பம்

7 ஆவது வருடமாக யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பமாகின்றது இக் கண்காட்சி 29,30,31 திகதிகளில் யாழ்.மாநகரசபை மைதானத்தில் முற்பகல் 10 தொடக்கம் இரவு 8 மணி வரை நடைபெறவுள்ளது.

இக் கண்காட்சியில் நிர்மாணம் உபசரிப்பு உணவு மென்பானவகை, பொதியிடல், வாகனங்கள், தகவல் தொடர்பாடல், தொழில்நுட்பம் ,நிதியியல் சேவைகள் ஆடைத்துறை விவசாயம் நுகர்வோர் உற்பத்திகள் உள்ளிட்ட பல துறைகளை உள்ளடக்கிய 300 காட்சிக்கூடங்கள் இந்த கண்காட்சியில் அமைக்கப்படவுள்ளன.

அத்துடன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகையான பொருட்கள் சந்தை விலையிலும் குறைவான விலைகளில் விற்பனை செய்யப்படவுள்ளன..

இதில் 60ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

காண்காட்சி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் பளிஹக்கார, கௌரவ விருந்தினர்களாக இந்திய துணைத்தூதுவர் நடராஜன், யாழ்.அரச அதிபர் வேதநாயகன், மற்றும் யாழ்.மாநகர சபை ஆணையாளர் வாகீசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர். மாலை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கலந்து கொள்ள உள்ளதாவும் தெரிவிக்கப்படுகின்றது.

பார்வையாளர்களிடமிருந்து நுழைவுக்கட்டணமாக 30 ரூபாய் அறவிடப்படும். அத்துடன் பாடசாலை மாணவர்கள் கட்டணமின்றி அனுமதிக்கப்படுவர்.பார்வையாளர்கள் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமையன்று நெருக்கடியைத் தவிர்க்கும் முகமாக முன்கூட்டியே
வருகை தந்து கண்காட்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Related Posts