யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக சந்தை, கண்காட்சி

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக சந்தை, கண்காட்சி எதிர்வரும் 29ஆம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரை யாழ் மாநகரசபை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு சேவை ஏற்பாட்டில் ஏழாவது தடவையாக நடைபெறும் இக்கண்காட்சியில் வடமாகாணத்தின் கிளிநொச்சி, வவுனியா, முல்லைதீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் நடத்தப்படுகிறது.

இக்கண்காட்சியில், உள்நாட்டு, வௌிநாட்டு நிறுவனங்கள் பல தத்தமது பொருட்களை காட்சிப்படுத்தப்படவுள்ளதுடன் ஏராளமான பார்வையாளர்கள் வருகைத்தருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts