யாழ்ப்பாணம் மாநகர சபை தீயணைப்பு வீரருக்கு இறுதி மரியாதை!!!

யாழ்ப்பாணம் மாநகர சபை தீயணைப்பு வாகன விபத்தில் உயிரிழந்த தீயணைப்புப் படை வீரர் அ.சகாயராசாவின் இறுதி அஞ்சலிக் கூட்ட நிகழ்வு நேற்று மாநகர தீயணைப்புப் படைப் பிரிவில் அலுவலகத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் முதன்மை உரையினை யாழ்ப்பாணம் மாநகர சபையின் பதில் முதல்வர் து.ஈசன் நிகழ்த்தினார். தொடர்ந்து சிறப்புரைகளும் இடம்பெற்றன.

அஞ்சலி கூட்டத்தில் யாழ் மாநகர சபையின் உறுப்பினர்கள் , விடுமுறையில் உள்ள முதல்வர் இமானுவேல் ஆனல்ட், மாநகர சபையின் நிர்வாக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், தீயணைப்படை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலியினை செலுத்தினர்.

Related Posts