யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் இன்று மின்சார விநியோகத்தடை

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக, மின்சார விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இன்று காலை 8.30 முதல் மாலை 5.30 வரை இந்த மின்சார விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி, யாழ்ப்பாண மாவட்டத்தில் உரும்பிராய் பிரதேசம், மருத்துவமனை வீதி, பல்கலைக்கழக ஆண்கள் விடுதி, பல்கலைக்கழக விஞ்ஞான பீடம் மற்றும் மாவட்டச் செயலாளர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மின்சார விநியோகம் தடைப்படவுள்ளது.

அதேபோல் கிளிநொச்சி பிரதேசத்தில் வேராவில், கிராஞ்சி, வலைப்பாடு ஆகிய இடங்களிலும், மன்னாரில் பள்ளிமுனை மற்றும் மன்னார் நகரின் ஒரு பகுதியிலும் மின்சார விநியோகம் தடைபடவுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

Related Posts