யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 7ஆம் விடுதியில் ஒருவருக்கு கோரோனா

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 7ஆம் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த கடற்படைச் சிப்பாய் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று காலை கண்டறியப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து அண்மையில் வீடு திரும்பிய அவர், கடமைக்காக யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார்.

இந்த நிலையில் அவர் சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 7ஆவது நோயாளர் விடுதியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு சந்தேகத்தின் அடிப்படையில் அவரது பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

முதல் இரண்டு தடவைகள் அவருக்கு கோரோனா தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்தது. எனினும் மூன்றாவது பரிசோதனையில் அவருக்கு கோரோனா வைரஸ் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளரிடம் தொடர்புகொண்ட போதும் பதில் கிடைக்கவில்லை.

Related Posts