யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பேரவைக்கு புதிதாக 14 உறுப்பினர்கள் நியமனம்!. முன்னாள் ஆளுனர் சுரேன் ராகவனும் உள்ளடக்கம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் ஆட்சி அதிகார சபையாகிய பேரவைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள வெளிவாரி உறுப்பினர்களின் பெயர் விவரங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட 14 வெளிவாரி உறுப்பினர்களுடன் உள்வாரியாக பதவி வழி வரும் 13 உறுப்பினர்கள் அடங்கலாக 27 உறுப்பினர்களைக் கொண்ட புதிய பேரவையின் ஆட்சிக்காலம் தொடர்ந்து வரும் மூன்று ஆண்டுகளாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு வெளிவாரியாக 16 உறுப்பினர்கள் நியமிக்கப்படவேண்டும். எனினும் இம்முறை 14 உறுப்பினர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வவுனியா வளாகம் வன்னி பல்கலைக்கழகம் என உருவாக்கப்படவுள்ள நிலையில் அந்த வளாகத்தின் மூன்று உள்வாரி உறுப்பினர்கள் நீங்கலாக உள்வாரி உறுப்பினர்கள் 13 பேர் என்ற அடிப்படையில் பேரவைக்கு வெளிவாரியாக 14 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பேரவைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள வெளிவாரி உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் வருமாறு :

1. பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை
2. பேராசிரியர் எஸ்.மோகனதாஸ்
3. உதவிக் கல்விப் பணிப்பாளர் பஞ்சநாதன் சுதர்சன்
4. கலாநிதி ஆறு. திருமுருகன்
5. வெளிநாட்டு தூதரக மூன்றாம் நிலைச் செயலாளர் விதுர்சன் வின்சன்ற் ராஜாராம்
6. சட்டத்தரணி ஆர்.ரி.விக்னராஜா (முன்னாள் மேல் நீதிமன்ற ஆணையாளர்)
7. கலாநிதி சுரேன் ராகவன் (முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர்)
8. நொத்தாரிசு மார்க்கண்டு திருவாதவூரன்
9. பொறியியலாளர் விஸ்வலிங்கம் சுதாகர் (வீதி அபிவிருத்தி அதிகார சபை)
10. தனியார் விவசாய நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர் குலேந்திரன் சிவராம்
11. காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு உறுப்பினர் மார்க்கண்டு நிமலன்
12. முன்னாள் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு உறுப்பினர் பொன்னையா தியாகராசா
13. கணக்காளர் வி. கனகசபாபதி
14. ஊடகவியலாளர் கோடீஸ்வரன் ருசாங்கன்

Related Posts