யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பஸ் தீக்கிரை

வௌ்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று தீக்கிரையாகியுள்ளது.

bus-fire

நேற்று நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் மூன்று மணத்தியாலங்கள் தீயில் தொடர்ச்சியாக பஸ் எரிந்து அழிவடைந்துள்ளது.

மாதம்பே கலஹிடியாவ 67ஆம் வளைவு பிரதேசத்தில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்து ஏற்படும் போது பஸ்ஸில் 25 பேர் வரையில் இருந்துள்ள போதும் அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ்ஸில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த விபத்தின் காரணமாக கொழும்பு – சிலாபம் வீதியின் போக்குவரத்து மூன்று மணத்தியாலங்கள் பாதிக்கப்பட்டிருந்த போதும் தற்போது நிலைமைகள் வழமைக்கு திரும்பியுள்ளன.

Related Posts