யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேச செயலகங்கள் முடக்கம்

யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பிரதேச செயலகங்களின் இணைய வழியாக பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப் பதிவு சான்றிதழ்கள் வழங்கும் முறைமை செயலிழந்து போயுள்ளதாக அங்கு கடமையாற்றும் அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலகங்களிலும் பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப் பதிவு என்பன இணைய வழியாக செய்யப்பட்டு, உடனடியாக மக்களுக்கு பிரதிகளை வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த இரண்டு பிரதேச செயலகங்களிலும் இந்தச் சேவைகள் செயலிழந்துள்ளமையால், பழைய நிலையான, விண்ணப்ப படிவங்களை கடித உறை, முத்திரையுடன் பிரதேச செயலகத்திடம் வழங்கிவிட்டு வந்தால் மாத்திரமே பிரதிகள் உரியவர்களுக்கு தபாலில் அனுப்பும் முறை பின்பற்றப்படுகின்றது.

இதனால் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இணைய வழியான முறையில் நாட்டில் எந்தவொரு பிரதேச செயலகத்தைச் சேர்ந்தவர்களும், எதாவது ஒரு பிரதேச செயலகத்தில் இந்தச் சான்றிதழ்களைப் பெறக்கூடியதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் எமது இணையத்தளத்தில் முன்னர் வெளிவந்த செய்தி
யாழ் பிரதேச செயலகத்தில் பதிவுச் சான்றிதழ்கள் எடுப்பதற்கான விரைவுச் சேவை இல்லை!

Related Posts