யாழ்ப்பாணம் கைதடிப் பாலத்தில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

யாழ்ப்பாணம் கைதடிப் பாலத்தில் இன்று காலை 6.30 மணியளவில் இரண்டு பேரூந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
யாழ்ப்பாணத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு முல்லைத்தீவு நோக்கி பயணம் செய்துகொண்டிருந்த போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும், கொழுப்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த பேருந்தும் கைதடிப் பாலத்திற்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளன.

இதில் விபத்தில் பயணிகள் இருவர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் இருந்து வருகை தந்த பேரூந்தின் சாரதியின் தூக்கம் காரணமாக இந்த விபத்து ஏற்றுட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றத.

இந்த விபத்து தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts