யாழ்ப்பாணம், கிளிநொச்சிக்கு அடிக்கப் போகிறது அதிர்ஷ்டம்; அதி நவீன நகரத் திட்டத்துக்கு தெரிவு

இலங்கையில் பிரதேச அமைப்பியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கியுள்ள 15 நகரங்களை அதி நவீன வசதிகள் கொண்ட முன்மாதிரி நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய நகரங்களும் அதி நவீன மயப்படுத்தப்படவுள்ளன.

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமையவே இந்த நவீன நகர அபிவிருத்திச் செயற்றிட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. கொழும்பு மற்றும் அதை அண்டிய பிரதேசங்களிலுள்ள சிறு நகரங்களில் மேற் கொள்ளப்பட்ட அபிவிருத்திச் செயற்பாடுகளின் போது பெறப்பட்ட அனுபவங்களை ஆதாரமாகக் கொண்டே இந்தச் செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய நகரங்களுடன் அக்கரைப்பற்று, இமதுவ, அப்புத்தளை, தியத்தலாவ, கண்டி, நுவரெலியா, நாரம்மலை, பண்டு வஸ்நுவர, மாத் தறை, எஹலியகொட, ஊருபொக்க, தங்கொட்டுவ, கருவலகஸ் வௌ ஆகிய நகரங்களே இந்தத் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டு நவீனப்படுத்தப்படவுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.

Related Posts