யாழ்ப்பாணம், கம்பஹா மாவட்டங்களின் வாக்குச்சீட்டு மிக நீளமானது

யாழ்ப்பாணம் மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு அச்சிடப்படவேண்டிய வாக்குச்சீட்டுகள் மிக நீண்டதாக ( 23″) அமையும் என்று தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், வன்னி, மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் திகாமடுல்ல மாவட்டங்களுக்கு அச்சிடப்படவேண்டிய வாக்குச்சீட்டுகள் அகலமாக (9″) அமையும் என்றும் செயலகம் குறிப்பிட்டுள்ளது.

18 உறுப்பினர்களைத் தெரிவுசெய்யும் கம்பஹா மாவட்டத்துக்கும் 7 உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கும் ஒரே அளவு நீண்ட வாக்குச்சீட்டு என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts