யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மாணவர் சங்கத்தின் வன்னிக்கிளை உதயம்

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் கல்வி பயின்ற பழைய மாணவர்களின் சங்கத்தின் வன்னிப்பிராந்தியக்கிளை ஒன்று இன்று (14.10.2015) கல்லுாரியின் மூத்த பழைய மாணவரும் மகாதேவா ஆச்சிரமத்தின் இயக்குனரும் முன்னாள் அரசாங்க அதிபருமான தி.இராஜநாயகத்தின் தலைமையில் கிளிநொச்சி இந்துக்கல்லூரியில் நடைபெற்ற ஆரம்ப கூட்டத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

அதில் பழைமாணவர்களும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் பழையமாணவர்சங்க தாய்ச்சங்க பிரதிநிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.

சங்கத்தின் ஆரம்ப செயற்குழு தலைவராக கு.யோகன் ராஜன் அவர்களும் செயலாளராக சி.அருணன் அவர்களும் பொருளாளராக கி.அகிலன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.போசகராக தி இராஜநாயகம் தெரிவுசெய்யப்பட்டார்.

உபதலைவர்களாக த.வரதராஜன், Dr.செரூஜனன், அ.இளமாறன் ஆகியோரும் உபசெயலாளராக Dr.சு.மணிவண்ணன் மற்றும் பத்திராதிபராக Dr.தர்சனன் ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டனர்.

இக்கூட்டத்தில் சங்கத்திற்கான யாப்பினை உருவாக்குவதற்கான குழுவும் உருவாக்கப்பட்டது.

சங்கத்தின் அடுத்த கட்ட செயற்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டது. வருகின்ற 22ம் திகதி யாழ்ப்பாணம் தாய்ச்சங்கத்துடன் இணைந்து கிளிநொச்சி இந்துக்கல்லூரியில் விஜயதசமி விழாவினை நடாத்துவதற்கும் முடிவு செய்யப்பட்டது.

யாழ் இந்துக்கல்லூரியின் 125 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் பழையமாணவர்சங்க தாய்ச்சங்கம் வன்னிப்பிராந்தியத்தில் கல்வி மற்றும் சமூகப்பணிகளை முன்னடுப்பதற்கு முடிவெடுத்து செய்ற்திட்டங்களை ஆரம்பித்துள்ள நிலையில் வன்னிக்கிளை ஆரம்பிக்கப்பட்டிருப்பது ஒரு மைற்கல் நிகழ்வாக இருக்கும் எனவும் கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ள வன்னிப்பிராந்தியத்திற்கு வரப்பிரசாதமாகவும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகவும் இருக்கும் என பழையமாணவர்கள் கருத்து தெரிவித்தனர்

மேலும் தகவல்களுக்கு www.jhcobavanni.com

Related Posts