யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் ஏற்பாட்டில் கல்லுாரியின் 125 வது ஆண்டு நிறைவை முனை்னிட்டு இன்று(26) இரத்ததானம் இடம்பெற்றது இதில் பெருமளவில் பழையமாணவர் பங்கேற்றனர். நிகழ்வு ஆறு திருமுருன் , சின்மய மிசன் சுவாமிகள் ஆகியோரின் ஆசியுரைகளுடன் ஆரம்பமாகியது . இன்றைய நாளில் விழாக்கொண்டாட்டங்கள் எதுவும் நடைபெறாத நிலையில் இந்த இரத்ததானம் மட்டும் நிகழ்ந்தது.
இன்றைய மாபெரும் உணர்ச்சிபூர்வமான இரத்ததான முகாமில் மொத்தமாக 206 பேர் கலந்துகொண்டனர். பழையமாணவர்களே இதில் அதிகமாக கலந்துகொண்டமை சிறப்பானது. கடந்த மார்ச் 1ம் திகதி சங்கத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்ட முகாமில் 94 பேர் பங்கெடுத்திருந்தனர். ஆகவே 125வது ஆண்டினை முன்னிட்டு பழைய மாணவர் சங்கத்தின் செயற்பாட்டில் மொத்தமாக 300 பைந்து இரத்தம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
தொடர்புடைய செய்தி கள் மேலும்