யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் போராட்டத்துக்கு அழைப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் வரும் 27ஆம் திகதி காலை 10.30 மணிக்கு இடம்பெறுவதோடு இவ்விடயம் குறித்து ஊடகவியலாளர் சந்திப்பும் நடத்தப்படவுள்ளது.

பொது நிர்வாக சுற்று நிருபங்களை பாரபட்சமாக நடைமுறைப்படுத்துதல், ஊழியர்களின் மேலதிக நேர கொடுப்பனவுக்கு நியாயமற்ற நிபந்தனைகள் விதிப்பு, ஊழியர்கள் மீதான அச்சுறுத்தல்கள் உட்பட பல்வேறு விடயங்களை முன்வைத்து இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளது.

தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு முன்னர் போராட்ட தினத்தன்று பல்கலைக்கழக ஊழியர்கள், காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை கடமையிலிருந்து வெளியேறி தங்கள் நிலைப்பாட்டை பல்கலைக்கழக சமூகத்தினருக்கு கவனயீர்ப்பு மூலம் தெரியப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, ஊழியர்கள் அனைவரும் பணியிடங்களிலிருந்து வெளியேறி பிரதான வளாகம், கிளிநொச்சி வளாகம் மற்றும் வவுனியா வளாக முன்றலில் ஒன்றுகூடுமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

Related Posts