யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்து அச்சுறுத்தல் விடுத்த வாள்வெட்டுக் கும்பல்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்குள் அத்துமீறி நுழைந்த ஆயுததாரிகளால் பல்கலைக்கழக மாணவர்கள் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

யாழ்.பல்கலைகழக கலைப்பீட மூன்றாம் வருட மாணவர்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவர்களில் ஒருவர் தனக்கு தெரிந்த பல்கலைகழகம் சாராத வேறு சிலரை தமக்கு சார்பாக அழைத்துவந்துள்ளார்.

இதன்படி நேற்றையதினம் மாலை குறித்த பல்கலைகழக மாணவன் மது போதையில் தனது சாகாக்கள் நால்வரை அழைத்துக்கொண்டு யாழ்.பல்கலைகழகத்தின் முகப்புக்கு சென்றுள்ளார்.

அங்கு வைத்து தம்மோடு முரண்பட்டுக்கொண்ட எனைய மாணவர்களுக்கு கூரிய வாள் போன்றவற்றை காட்டியும், தமக்கு ஆவா குழுவை தெரியும் என கூறியும் அம் மாணவர்களை அச்சுறுத்தியுள்ளார்.

இதனையடுத்து அவ் விடத்தில் அதிகமான பல்கலைகழக மாணவர்கள் ஒன்றுசேரவே குறித்த கும்பல் அங்கிருந்து கலைந்து சென்றதாக சம்பவத்தினை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்திருந்தார்கள்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பாக கோப்பாய்காவல் நிலையத்தில் பல்கலைகழக சமூகம் முறைப்பாடு ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts