யாழ்ப்பாணத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் இந்தியாவில் கைது!

இந்திய கடலோர காவல் படையினரால் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறை, ஆதிகோவிலடி பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் மகன் சாந்தரூபன் (வயது 30) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

நாகப்பட்டினம் தேவராண்யம் பகுதியில் இருந்து 14 நாட்டிக்கல் தொலைவில் சந்தேகத்திற்கு இடமான முறையில் படகொன்றினை அவதானித்த இந்திய கடலோர காவல் படையினர் படகினை அண்மித்து சோதனை செய்தனர்.

அதன்போது இலங்கை மீனவர் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் அவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவரிடம் சுங்கத்துறை கடலோர பாதுகாப்பு குழும காவல் பொலிஸார் கடலோர காவல்படை அதிகாரிகள், மற்றும் மாநில உளவுத்துறை பொலிஸார் விசாரணை நடத்தினர்.

Related Posts