யாழ்ப்பாணத்தில் வயோதிபப் பெண் கோவிட்-19 நோய்த்தொற்றினால் சாவு!!

யாழ்ப்பாணத்தில் கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 76 வயதுடைய வயோதிபப் பெண்ணே நேற்றிரவு உயிரிழந்தார்.

கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாகவே அவர் உயிரிழந்தார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.

நீண்ட நாள்களுக்கு பின் யாழ்ப்பாணத்தில் கோவிட்-19 நோய்த்தொற்றின் பரவல் அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts