யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டுகள் அதிகரித்து உள்ளதாகவும், திருடப்படும் மோட்டார் சைக்கிள்கள் உடனேயே உதிரிபாகங்களாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாண நகர் பகுதிகளை அண்மித்த பகுதிகளில் சில மாதங்களில் 32 மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளன. அவை தொடர்பிலான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
விசாரணைகளின்போது , திருடப்படும் மோட்டார் சைக்கிள்களை உடனேயே உதிரிபாகங்களாக பிரித்து விற்பனையில் ஈடுபடுகின்றனர்.
அதானல் மோட்டார் சைக்கிள்களை மீட்பதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிள்களை பாதுகாப்பாக நிறுத்தி விட்டு,
அவற்றுக்கு “ஹாண்டில் லொக்” போட்டு செல்லுமாறும் , மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.