யாழ்ப்பாணத்தில் நகரை எவ்வாறு அபிவிருத்தி செய்ய வேண்டும் மற்றும் அங்கு நிலவும் குறைபாடுகள் தொடர்பில் தமது ஆலோசனைகள் மற்றும் முறைப்பாடுகளை மக்கள் சொல்லக் கூடிய வகையில் முறைப்பாட்டுப் பெட்டிகள் அமைக்கப்பட உள்ளன.அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
யாழ்ப்பாண நகரின் முக்கிய இடங்களில் இந்த முறைப்பாட்டு பெட்டிகள் அமைக்கப்பட உள்ளன. நகரத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள மாநகரசபை நிர்வாகம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அமைச்சர் கோரியுள்ளார்.
யாழ்ப்பாண நகர வர்த்தகர்களிடம் எவரேனும் கப்பம் கோரினால் உடனடியாக பொலிஸாருக்கு அல்லது தமக்கும் அறிவிக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.