யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறிய முஸ்லிம் மக்களின் வீட்டுத்திட்ட விண்ணப்பங்கள் கையளிக்கும் நிகழ்வு

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறிய முஸ்லிம் மக்களின் வீட்டுத்திட்ட விண்ணப்பங்கள் கையளிக்கும் நிகழ்வு ஒன்று யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி ஆகியோர் இதில் பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.

இந்நிகழ்வில் மீள்குடியேறிய மக்களிற்கு 50 துவிச்சக்கர வண்டிகள் கையளிக்கப்பட்டன. மேலும் 50 துவிச்சக்கரவண்டிகள் விரைவில் வழங்கப்படவுள்ளன. மேலும் இம்மக்களுக்கு தேவையான உட்கட்டுமான வசதிகளை விரைவில் பூர்த்திசெய்ய உரிய நடவடிக்ககைள் மேற்கொள்ளப்படுமென ஆளுநர் உறுதியளித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின், யாழ் மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், யாழ் மாநகர சபை உறுப்பினர்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டார்கள்.

muslim-alunar-function

Related Posts