இலங்கை பொலிஸ் திணைக்களத்துக்கு பொலிஸ் கொஸ்தாபல் பதவிக்கு ஆட்சேர்ப்பதற்கான சுவரொட்டிகள் யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளன.
18 வயது முதல் 28 வயது வரையான திருமணமாகாத க.பொ.த. சாதாரண தர பரீட்சையை கணிதம் தாய் மொழி உட்பட்ட இரண்டு தடவைகளுக்கு மேற்படாமல் சித்தியடைந்த ஆகக்குறைந்த 05 அடி 04 அங்குல உயரம் கொண்டவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என அச்சுவரொட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடிப்படைச்சம்பளம் கடினக் கொடுப்பனவு இணைந்த கொடுப்பனவு மற்றும் வேறு கொடுப்பனவுகளும் பற்றிய விபரங்களும் அதில் அடங்கியுள்ளன.
இப்பதவிக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் மே மாதம் 29 ஆம் திகதிக்கு முன்னதாக பணிப்பாளர் பொலிஸ் ஆட்சேர்ப்பு பிரிவு 375 ஸ்ரீ ஜயந்தி மாவத்தை கொழும்பு 6 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.