யாழ்ப்பாணத்தில் லீசிங்க் நிறுவனத்தினர் என்ற பேர்வழியில் கார்கள் விற்பனை செய்யப்பட்டு பொலிஸாரின் உதவியுடன் மீண்டும் கொள்ளையிடப்படுகின்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
கொக்குவில் பகுதியிலுள்ள ஒருவர் லீசிங் நிறுவனத்திடம் கார் ஒன்றைப் பெற்றுள்ளார்.
இவரது வீட்டிற்கு சென்ற தென்னிலங்கை குழுவொன்று தவணைப் பணத்தை உரிய காலத்தில் செலுத்த வில்லை என்று கூறி காரை பறிக்க முயற்சித்துள்ளனர். ஆயினும், உரிமையாளர் விட்டுக்கொடுக்காத காரணத்தினால் யாழ்.பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவருடன் வந்து காரை பறித்து சென்றுள்ளனர்.
பின்னர் இது தொடர்பில் குறித்த லீசிங் நிறுவனத்திடம் உரிமையாளர் வினவியபோது தாம் அப்படி செய்யவில்லையென்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்பின்னர் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து இச்சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் லீசிங் வாகனங்களை போலி ஆவணங்கள் தயாரித்து விற்கும் செயற்பாடுகள் அதிகரித்துள்ள அதேவேளை இவ்வாறான கொள்ளைகளும் அதிகரித்துள்ளன.