யாழ்ப்பாணத்தில் புத்தாண்டுச் சந்தை!

e-jaffnaதமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு உள்ளூர் உற்பத்திகளையும், உற்பத்தியாளர்களையும், ஊக்குவிக்கும் நோக்குடன் இலங்கையின் சகல பிரதேசங்களிலும் நடாத்தப்படும் வாழ்வின் எழுச்சி (திவிநெகும) புத்தாண்டுச்சந்தை யாழ்ப்பாணத்திலும் நடைபெறுகின்றது.

இந்தச் சந்தையில் உள்ளூர் உற்பத்திகளான, பருத்தித்துறை வடை, மிளகாய்த்தூள், கண்ணாடி அலங்காரப் பொருட்கள், சிறுவர்களுக்கான பொம்மைகள், ஆடைகள், மரக்கறிகள், மடபாண்ட உற்பத்திகள், சிறுவர்களுக்கான புத்தகங்கள், மெழுகுதிரி வேலைப்பாடுகள், பனையோலை உற்பத்திகள், செப்புத்தகட்டு வேலைப்பாடுகள் என பல்வேறு உற்பத்தி பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

சமுர்த்தி அதிகாரசபை மற்றும் நல்லூர் பிரதேச செயலகம் உன்பன இணைந்து ஏற்பாட்டில் யாழ்.கந்தர்மடம் சைவப்பிரகாசா வித்தியாலயத்தில் நேற்றுக் காலை 8.00 மணிக்கு ஆரம்பமான இந்த புத்தாண்டுச்சந்தை, மாலை 6.00 மணிவரை நடைபெற்றது. இன்றைய தினமும் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணிவரை நடைபெறவுள்ளது.

அதுமட்டுமன்றி, புத்தாண்டு சந்தைக்கு வருபவர்களை மகிழ்விக்கும் முகமாக சந்தையின் பிரதான மண்டபத்தில் இசைக்கச்சேரியும் நடைபெறுகிறது.

Related Posts