யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் இருவர் கொலை செய்யப்பட்டமை மற்றும் பொலிஸ் புலானாய்வு பிரிவு உறுப்பினர்கள் இருவர் தாக்கப்பட்ட சம்பவங்கள் ஆகியவை ராஜபக்ச தரப்பு சூழ்ச்சியாளர்களின் செயற்பாடு என யாழ்ப்பாணத்தில் பணி யாற்றிய உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் ஆதாரங்களுடன் தகவல் வெளியிட்டுள்ளார்.
யாழில் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் சிவில் உறுப்பினர்கள் உயிரிழந்த சம்பவங்கள் 1980ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் இடம்பெற்ற சம்பவமாகும்.
யுத்ததின் போதும் இராணுவத்தினரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதற்கு பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு பொது மக்களை கொலை செய்யப்படாத நிலையில், மோட்டார் சைக்கிளை நிறுத்தவில்லை என்ற காரணத்திற்காக பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளமை முழுமையான ஒரு சூழ்ச்சி சம்பவமாகும்.
மோட்டார் சைக்கிள் நிறுத்தப்படவில்லை என்றால் துரத்தி பிடிப்பதற்கு வாகன இல்லாத சந்தர்ப்பங்களில் பொலிஸார் மோட்டார் சைக்கிளின் இலக்கத்தை பதிவு செய்துக் கொண்டு மோட்டார் வாகன பதிவு திணைக்களத்தில் இது தொடர்பில் தகவல் பெற்றுக் கொண்டு விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
முன்னர் போன்று இன்றி தற்போது மோட்டார் வாகன திணைக்களத்திற்கு வாகனத்தின் இலக்கத்தை வழங்கினால் சில மணித்தியாளங்களுக்குள் தகவல் பெற்றுக் கொள்ள கூடிய வகையில் உள்ளது.
இந்நிலையில், வாகனத்தை நிறுத்தவில்லை என்பதற்காக துப்பாக்கி பிரயோகத் மேற்கொள்ளப்பட்டுள்ளதென்பது முழுமையாக யாருடையதோ துண்டுதலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சம்பவம் என பொலிஸார் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இன்னுமொரு பக்கத்தில் அவசர சட்டம் இல்லாத நிலையில் பொலிஸ் அதிகாரிகள் உயர் பொலிஸ் அதிகாரியின் அனுமதியின்றி டீ – 56 ரக துப்பாக்கியில் ஒரே சந்தர்ப்பத்தில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வதற்கு அனுமதி இல்லாத நிலையில் இப்படி ஒரு சம்பவம் சாதாரணமாக இடம்பெற முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நிலைமையினுள் ராஜபக்சர்களின் ஆதரவாளரான தற்போதைய பாதுகாப்பு செயலாளர், துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் பதற்றம் தணிவதற்குள் அது சரியென கருத்து வெளியிட்டுள்ளமை சூழ்ச்சியின் ஒரு பகுதியாகும். பாதுகாப்பு செயலாளர் என்பவர் சம்பவத்தை மேலும் தூண்டிவிடாமல் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட அதிகாரிகளின் கடந்த காலங்கள் குறித்து தேடி பார்ப்பதே கடமையாகும் என அவர் கூறியுள்ளார்.
அது மாத்திரமின்றி நேற்று சாதாரண உடை அணிந்து மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த பொலிஸ் புலனாய்வு சேவை உறுப்பினர்கள் இருவர் யாழ்ப்பாணம் சுன்னாகம் நகரத்தில் மத்தியில் வைத்து வெட்டப்பட்டமை யுத்தம் ஒன்றை தூண்டிவிடுவதற்காக ராஜபக்ச தரப்பினர்கள் மேற்கொள்ளும் சூழ்ச்சி என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலக்கு தகடுகள் இன்றில் மூன்று மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் நவரத்னம் என்ற புலனாய்வு பிரிவு அதிகாரி மற்றும் ஹேரத் என்ற புலனாய்வு பிரிவு அதிகாரியை தாக்கியுள்ள சம்பவம் யாழ் மாணவர்களின் மரணத்தினால் மேற்கொள்ளப்பட்டதென ஒன்றை ஒன்று கோர்த்து விடுவதற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள ராஜபக்ச தரப்பு இராணுவ புலனாய்வு பிரிவு உறுப்பினர்கள் சிலரினால் மேற்கொள்ளப்பட்டதென சில காலம் யாழில் சேவை செய்த உயர் பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.