யாழ்ப்பாணத்தில் த.தே.கூவின் பரப்புரைக் கூட்டமும் வேட்பாளர் அறிமுகமும்

வடமாகாண சபைத் தேர்தக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பரப்புரைக் கூட்டமும் வேட்பாளர் அறிமுகமும் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது.

அதன்படி எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிட உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்மாவட்டத்திற்கான முதலாவது பரப்புரைக் கூட்டமும் வேட்பாளர் அறிமுகமும் இடம்பெற்றது.

TNA-elecetion-meeting-1

இதன் போது வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் தம்மை அறிமுகம் செய்து கொண்டதுடன் கட்சியின் தலைவர்களும் உரையாற்றினர்.

இந்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், செயலாளர் மாவை சேனாதிராசா, முதன் வேட்பாளர் சி.வி விக்கினேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன்,சுரேஸ்பிரேமச்சந்திரன்,சுமந்திரன், சிறிதரன்,அப்பாத்துறை விநாயகமூர்த்தி, சிவாஜிலிங்கம் ,தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி, புளோட் அமைப்பின் சித்தார்த்தன், வடமாகாண சபை வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

TNA-elecetion-meeting-2

இந்நிகழ்வில் மண்டபம் நிறைந்த மக்களும் மண்டபத்திற்கு வெளியே பெருந்திரளான மக்களும் கலந்துகொண்டு கட்சித் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் உரையினைக் கேட்டுக்கொண்டிருநதார்கள்.

Related Posts