யாழ்ப்பாணத்தில் தேங்காய்க்குத் தட்டுப்பாடு!

யாழ்ப்பாணத்தில் தேங்காய்க்குத் திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணக் குடாநாட்டின் மிகப் பெரிய சந்தையான திருநெல்வேலிச் சந்தையில் வழமையாக தேங்காய் குவியலாகக் காணப்படும். ஆனால் நேற்று தேங்காயின்றி சந்தை வெறிச்சோடிக் காணப்பட்டது.

இது தொடர்பாக வியாபாரிகளிடம் வினவியபோது, கடந்த சில தினங்களாக சந்தைக்கு தேங்காய் வருவது சடுதியாகக் குறைந்துள்ளது. யாழ். குடாநாட்டில் அதிகமாகத் தேங்காய் விளையும் கொடிகாமம், பளை போன்ற பகுதிகளிலிருந்து தென்னிலங்கையைச் சேர்ந்த சில நிறுவனங்கள் தேங்காய் கொள்வனவு செய்து செல்வதே விலை வீழ்ச்சிக்குக் காரணமெனத் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் தேங்காய் விற்பனையும் சடுதியாகக் குறைந்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Posts