யாழ்ப்பாணத்தில் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளதாக வடமாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் சீர்திருத்த திணைக்கள புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த வருடம் தை மாதம் முதல் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளன.
இதன்படி பாலியல் துஸ்பிரயோகத்தினால் 149 சிறுவர்களும் பாலியல் சேஷ்டைகளினால் 18 சிறுவர்களும், மற்றும் உடல் சம்மந்தமான துஷ்பிரயோகத்தினால் 69 சிறுவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் பாலியல் ரீதியான துஷ்பிரயோகத்தில் ஏனைய நான்கு மாவட்டங்களை விடவும் யாழ்ப்பாணத்திலேயே அதிகளவான துஷ்பிரயோகங்கள் பதிவாகியுள்ளன.
யாழ்ப்பாணத்தில் 68 சம்பவங்களும், முல்லைதீவில் 28 சம்பவங்களும், வவுனியாவில் 22 சம்பவங்களும், கிளிநொச்சியில் 18 சம்பவங்களும், மன்னாரில் 13 சம்பவங்களும், பதிவாகியுள்ளன. மேலும் பாலியல் துஸ்பிரயோகத்திற்கான முயற்சியாக முல்லைதீவில் 6 முறைப்பாடுகளும், வவுனியாவில் 5 முறைப்பாடிகளும், கிளிநொச்சியில் 4, யாழ்ப்பாணத்தில் 2, மன்னாரில் 1 ஆக பதிவாகியுள்ளன. உடல் சம்மந்தமான துஷ்பிரயோகங்களில் கிளிநொச்சியில் 22 முறைப்பாடுகளும், வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் தலா 14, முறைப்பாடுகளும், முல்லைதீவில் 10 முறைப்பாடுகளும், மன்னாரில் 9 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.