யாழ்ப்பாணத்தில் கொடூரம்: 4 வயதுக் குழந்தைக்கு பாலியல் வதை!! –

4 வயது பெண் குழந்தையை பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்குட்படுத்திய மிகக் கொடூரமான சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

4 வயது பெண் குழந்தை அவரது தாயாரால் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். குழந்தை 21ஆம் நோயாளர் விடுதியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது. குழந்தைக்கு அந்தரங்க உறுப்பிலிருந்து குருதி வெளியேறியுள்ளது.

அதனால் குழந்தை சட்ட மருத்துவ அதிகாரியின் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டார். பெண் குழந்தை பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளார் என்று சட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

சட்ட மருத்துவ அறிக்கை வழங்கப்பட்டதும் தாயார் தனது குழந்தை அழைத்துக் கொண்டு தப்பிக்க முற்பட்டுள்ளார். எனினும் சம்பவம் தொடர்பில் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், வைத்தியசாலையின் பணியாளர்களும் தாயாரின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்டு விழிப்பாக உள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குழந்தையைச் சேர்க்கும் போது தாயார் வழங்கிய தகவல்கள் அனைத்தும் தவறானவை என்று கண்டறியப்பட்டுள்ளது.

சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

“குழந்தையின் தந்தை வெளிநாட்டில் உள்ளார். தாயாரின் நடத்தை தவறானது. அவருடன் தொடர்புள்ளவரே குழந்தையைத் துன்புறுத்தியுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டது.

Related Posts