யாழ்ப்பாணத்தில் களிமண் சிற்பப் பயிற்சி நெறி

திருமறைக் கலாமன்றத்தின் ஓவியக்கூடத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ள களிமண் சிற்ப பயிற்சிநெறி, இனிவரும் காலங்களில் தொடர்ந்து சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில் நடைபெறுமனெ அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்றத்தின் கலைத்தூது அழகியல் கல்லூரியில் இப்பயிற்சி நெறி ஆரம்பிகப்பட்டுள்ளது.

திருமறைக் கலாமன்றத்தின் ஓவியக்கூடம் வடமாகாணத்தின் முதலாவது ஓவியக்கூடமாக யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டு மூன்றாவது ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், அதன் முதலாவது சான்றிதழ் பயிற்சி நெறியாக இப்பயிற்சி நெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சி நெறியின் ஆரம்ப வைபவம் திருமறைக் கலாமன்றத்தின் ஊடக இணைப்பாளர் கி.செல்மர் எமில் தலைமையில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்தில் முதல்தடவையாக என்று கூறத்தக்க அளவுக்கு சிறப்பு மிக்கதாக அமைகின்ற களிமண் சிற்பப் பயிற்சி நெறி தொடர்ந்து மாதத்தின் இறுதி சனி, ஞாயிறு தினங்களில் நடைபெறவுள்ளது.

இதனை கொழும்பில் இயங்கும் கட்புல, ஆற்றுகைக் கலைகள் பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்புகள் கற்கை நெறியின் பீடாதிபதி பேராசிரியர் சரத் சந்திரஜீவாவும் அவரது குழுவினரான லலித்லன் சக்கர, றஞ்சித் பெறேறா, ஜனகஹெரத், அனோமா ஜெயசிங்க ஆகியோரும் வழிநடத்தவுள்ளார்கள்.

கடந்த சனி, ஞாயிறு தினங்களில் இடம்பெற்ற இப்பயிற்சி நெறியில் ஓவிய ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலதரப்பட்ட நிலையிலுள்ள 25 பேர் மட்டும் இணைத்துக்கொள்ளப்பட்டார்கள்.

Related Posts