யாழ்ப்பாணத்தில் கலப்பு மின் உற்பத்தி நிலையம்

இலங்கையில் முதல் தடவையாக கலப்பு மின் உற்பத்தி நிலையம் யாழ்ப்பாணம் எழுவைதீவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மின்சக்தி மற்றும் மின்வலு அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய இந்த மின் திட்டத்தை நேற்று திறந்துவைத்தார்.

இந்தத் திட்டத்தின் ஊடாக காற்றலை சக்தி, சூரிய சக்தி மற்றும் எரிபொருளை பயன்படுத்தி 60 கிலோவோட் மின்சக்தியை உற்பத்தி செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியவற்றின் நிதி உதவியுடன் 187 மில்லியன் ரூபா செலவில் இந்த மின்உற்பத்தி திட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

Related Posts