யாழ்ப்பாணத்தில் கடும் மழையினால் தாழ்நில பிரதேச மக்கள் பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்துவரும் கடும்மழை காரணமாக யாழ் நகரையொட்டிய கரையோர மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பொம்மைவெளி, நாவாந்துறை, காக்கைதீவு, வசந்தபுரம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.

வீடுகளில் வெள்ளம் புகுந்ததினால் மக்கள் உணவு, உறையுள் செய்வதற்கும் சிரமப்பட்டு வருகின்றனர்.
மேற்படி பிரதேசத்தில் தேங்கியுள்ள வெள்ள நீரினை யாழ்ப்பாண மாநகர சபையினர் வெளியேற்றி வருகின்றனர்

Related Posts