யாழ்ப்பாணத்தில் எட்டாவது தடவையாக மாபெரும் வர்த்தகக் கண்காட்சி!

எட்டாவது தடவையாக யாழ் மாநகரசபை மைதானத்தில் எதிர்வரும் ஜனவரி 27தொடக்கம் 29 வரை இடம்பெறும் வர்த்தகக் கண்காட்சியில் க.பொ.த சாதாரண, உயர்தர மாணவர்கள் பயன்பெறும் விதத்தில் “கல்வி யாழ்ப்பாணம் 2017” என்ற பெயரில் உயர்கல்வி தொழில் கண்காட்சியொன்றும் இடம்பெறவுள்ளது.

இந்தக் கண்காட்சியில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், கல்வி நிலையங்கள், கணனி கற்கை நிலையங்கள், ஹோட்டல் நிர்வாகமும் உல்லாசப் பயணத்துறைக்குமான கல்வி நிலையங்கள், தொழில்துறை பாடசாலைகள், தொழில் பயிற்சி நிலையங்கள், போன்றன தங்கள் காட்சியகங்களை நிறுவ முடியுமென வர்த்தகக் கண்காட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்தத் தடவை 300க்கு மேற்பட்ட காட்சியகங்களைக் கொண்டுள்ள இந்தக் கண்காட்சியில் அதிகமான பார்வையாளா்களின் வருகை எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த வருடம் 60,000 பேர் வரையில் இந்தக் கண்காட்சியைப் பார்வையிட வருகை தந்திருந்தனர்.

இந்த வருடம் இந்தக் கண்காட்சி நிகழ்வுடன் இரண்டு நாள் இசைவிழாவிற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts