யாழ்ப்பாணத்தில் எஞ்சியுள்ள காணிகளும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் ;- யாழ் கட்டளைத் தளபதி

mahinda_hathurusingheயாழ்ப்பாணம் உயர் பாதுகாப்பு வலயத்தின் கீழ் எஞ்சியுள்ள காணிகளை அவற்றின் உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக யாழ்ப்பாண கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்க நேற்று தெரிவித்திருந்தார்.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

காணி அபிவிருத்தி அமைச்சின் ஊடாக இந்த பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்று காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனிடம் கேள்வி எழுப்பி இருந்தது, இதற்கு அமைச்சர் இந்த விடயம் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்துள்ளார்

Related Posts