யாழ்ப்பாணத்தில் உலக யோகா தினம் அனுஷ்டிப்பு

யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் உலக யோகா தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இன்று காலை 7.30 மணிக்கு இந்த நிகழ்வு ஆரம்பமானது.

இந்திய துணைத் தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார். பாடசாலை மாணவர்களுக்கு யோகா கலை பயிற்சிகள் வழங்கப்பட்டன.

Related Posts