தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கொடிகாமத்தில் இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த பகுதிகள் மறு அறிவித்தல்வரை முடக்கப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கொடிகாமம் வடக்கு மற்றும் கொடிகாமம் மத்தி ஆகிய இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகளே நேற்று இரவு முதல் முடக்கப்படுகிறது.
குறித்த பகுதிகளில் அதிகளவு கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதனையடுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதுடன் அந்தப் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியில் செல்வதற்கோ அல்லது வெளியில் உள்ளவர்கள் கிராமங்களுக்குள் செல்வதற்கோ அனுமதிக்கப்படமாட்டார்கள் என மருத்துவர் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.