யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள மிக உயரமான விகாரைக்கு கலசம் வைப்பு

காங்கேசன்துறை, தையிட்டிப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விகாரை ஒன்றிற்கு கலசம் வைக்கும் நிகழ்வுகள் மிக இரகசியமாக நேற்றைய தினம்(வியாழக்கிழமை) இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிகழ்வினை முன்னிட்டு அப்பகுதியில் பெருமளவான இராணுவம் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதேவேளை தையிட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த விகாரையே யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள மிக உயரமான விகாரை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Related Posts