யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் கண்நோய்!

யாழில் நிலவி வரும் கடும் காற்றுடனான காலநிலை காரணமாக கண் நோய் பரவி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக வடமராட்சி, வலிகாமம் பிரதேசத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள் மத்தியில் கண் நோய் வேகமாகப் பரவி வருவது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும், கண் கடுமையாகச் சிவப்படைதல், கண்ணில் வலி மற்றும் எரிச்சல் ஏற்படுத்தல் இதன் அறிகுறிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொதுமக்கள் இது தொடர்பில் அவதானமாக இருப்பதுடன் மேற்கண்ட அறிகுறிகள் காணப்படும் பட்சத்தில் அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடுமாறும் பொது சுகாதார பிரிவினர் அறிவித்துள்ளனர்.

அத்துடன் கண்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சுத்தமான கைக்குட்டையினை பயன்படுத்துமாறும், வெயில், தூசிகளுக்குள் செல்வதனைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Share

Related Posts