யாழ்ப்பாணக் கல்லூரி படுதோல்வி!!

யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையிலான ராஜன் கதிர்காமர் சுற்றுக் கிண்ணத்துக்கான ஆட்டத்தில் 187 ஓட்டங்களால் வென்றது சென். பற்றிக்ஸ்.

யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நேற்று இந்த ஆட்டம் இடம்பெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி நிர்ணயிக்கப்பட்ட 50 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 9 இலக்குகளை இழந்து 299 ஓட்டங்களைப் பெற்றது. அதிகபட்சமாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான டிலக்சன் 96 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் டிகாஸ் 4 இலக்குகளையும், சிந்துயன் 3 இலக்குகளையும், கேசவன் 2 இலக்குகளையும் கைப்பற்றினர்.

பதிலுக்குக் களமிறங்கிய யாழ்ப்பாணக் கல்லூரி அணி 112 ஓட்டங்களில் சகல இலக்குகளையும் இழந்து 187 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. பந்துவீச்சில் 3 இலக்குகளையும், கஸ்ரோ, டினிசியஸ் இருவரும் தலா 2 இலக்குகளையும், மொனிக் நிதுசன், டிலக்சன் தலா ஓர் இலக்கையும் கைப்பற்றினார்.

Related Posts