யாழ்தேவி இனி காங்கேசன்துறை வரை!!

யாழ். ரயில் நிலையத்தில் இருந்து காங்கேசன்துறை வரை ராயில் பாதை அமைப்பதற்கான நான்காம் கட்ட நடவடிக்கை துரிதமாக இடம்பெற்று வருகின்றது.

train-navatkuly

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான ரயில் பாதை நிர்மாணப்பணிகள் நான்கு கட்டங்களாக இடம்பெற்றுவருகின்றன.

இதில் முதற்கட்டமாக ஓமந்தையில் இருந்து கிளிநொச்சி வரையும், இரண்டாம் கட்டமாக கிளிநொச்சியில் இருந்து பளைவரையும், மூன்றாம் கட்டமாக பளையில் இருந்து யாழ்ப்பாணம் வரையும் முன்னெடுக்கப்பட்டன. நான்காம் கட்டமாக யாழ்ப்பாணத்தில் இருந்து காங்கேசன்துறை வரையும் இப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இந்தப் பணிகளில் தற்போது பரீச்சார்த்த ரயில் சேவையும் யாழ். ரயில் நிலையத்திலிருந்து, நீராவியடி, கொக்குவில், கோண்டாவில் வரை நடத்தப்பட்டுள்ளன.

Related Posts