யாழ்தேவியை மாத்தறையிலிருந்து ஆரம்பிக்க கோரிக்கை

யாழ்தேவி ரயில் சேவையை மாத்தறையிலிருந்து ஆரம்பிக்குமாறு கரையோர ரயில் பயணிகளின் சங்கம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பில், அந்த சங்கத்தின் தலைவர் குணபால வித்தாரண, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நீண்ட காலத்திற்கு பின்னர் யாழ்ப்பாணம் வரை பயணத்தை ஆரம்பிக்கவிருக்கின்ற யாழ்.தேவி ரயில் சேவையின் பயணமானது கொழும்பு கோட்டையிலிருந்து ஆரம்பிப்பதால், வடக்குக்கும்-தெற்கிற்கும் இடையில் உண்மையான உறவுபாலம் ஏற்படாது.

யாழ்தேவி ரயில் சேவை, தெய்வேந்திர முனைக்கு அண்மையிலுள்ள மாத்தறை ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டால் தென்னிலங்கை மக்களுடன் நல்லுறவை தொடரலாம் மற்றும் கதிர்காமத்திற்கு வருகின்ற யாத்திரிகர்கள் யாழ்ப்பாண மக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவர் என்றும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related Posts