யாழ்ப்பாணத்தில் கடந்த 2005ஆம் ஆண்டில் 58 சதவீதமான வீடுகளுக்கு மாத்திரமே மின்சார வசதி இருந்தது. இருப்பினும், தற்போது, அது 96 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் தெரிவித்தார்.
யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றுவரும் வட மாகாண அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் இந்த அபிவிருத்திக் குழுக் கூட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.