யாழில் 90% தபால்மூல வாக்குப்பதிவு

ஜனாதிபதி தேர்தலின் தபால் வாக்களிப்பில் யாழ்.மாவட்டத்தில் 90 வீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியும் மாவட்டச் செயலருமான சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

dak-suntharam-arumainayagam-GA

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

யாழ்.மாவட்டத்தில் தபால் மூலமான வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை (23) முதல் 250 வாக்குச் சாவடிகளில் 200 தேர்தல் கண்காணிப்பாளர்களின் கண்காணிப்பின் கீழ் இடம்பெற்றது.

தபால் மூலம் வாக்களிப்பதற்கு யாழ். மாவட்டத்தில் 14,328பேர் தகுதி பெற்றிருந்ததுடன், அவர்களில் 90 வீதமானவர்கள் வாக்களித்திருந்ததாக அவர் தெரிவித்தார்.

Related Posts