வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடம் நகர்த்த வேண்டியிருப்பதாலும், புதிய உயர் அழுத்த மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காகவும் மின் தடை செய்யப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இன்று சனிக்கிழமை காலை 08.30 மணியிலிருந்து மாலை 05.30 மணிவரையும் உரும்பிராய், கோண்டாவில், மருத்துவபீடப் பிரதேசம், திருநெல்வேலிப் பிரதேசம், பட்டணப்பகுதி நீங்கலாக யாழ். மாநகரசபைப் பகுதி, ஸ்ரான்லி வீதி, பிறவுண் வீதி, கஸ்தூரியார் வீதி, கன்னாதிட்டி, தட்டார்தெரு தொடக்கம் முட்டாஸ்கடைச் சந்தி வரையான பிரதேசம், மனோகரா பிரதேசம், புத்தூர், ஆவரங்கால், ஊறணி, வீரவாணி, வாதரவத்தை, சோரன்பற்று, புதுக்காடு ஆகிய இடங்களிலும்,
நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 08.30 மணியிலிருந்து மாலை 05.30 மணிவரையும் குஞ்சர்கடைப் பிரதேசத்தின் ஒரு பகுதி, உடுப்பிட்டி, தொண்டைமனாறு, வல்வெட்டித்துறை, வல்வெட்டி, நவிண்டில், உரும்பிராய், கோண்டாவில், மருத்துவபீடப் பிரதேசம், திருநெல்வேலிப் பிரதேசம், பட்டணப்பகுதி நீங்கலாக யாழ். மாநகரசபைப் பகுதி, ஸ்ரான்லி வீதி, பிறவுண் வீதி, கஸ்தூரியார் வீதி, கன்னாதிட்டி, தட்டார்தெரு தொடக்கம் முட்டாஸ்கடைச் சந்தி வரையான பிரதேசம், மனோகரா பிரதேசம், ஈஞ்சை வைரவர் பிரதேசம், சோரன்பற்று, புதுக்காடு ஆகிய இடங்களிலும்,
எதிர்வரும் திங்கட்கிழமை காலை 08.30 மணியிலிருந்து மாலை 05.30 மணிவரையும் சோரன்பற்று, புதுக்காடு ஆகிய இடங்களிலும்,
செவ்வாய்க்கிழமை காலை 08.30 மணியிலிருந்து மாலை 05.30 மணிவரையும் குஞ்சர்கடைப் பிரதேசத்தின் ஒரு பகுதி, உடுப்பிட்டி, தொண்டைமனாறு, வல்வெட்டித்துறை, வல்வெட்டி, நவிண்டில், ஈஞ்சை வைரவர் பிரதேசம், சோரன்பற்று, புதுக்காடு ஆகிய இடங்களிலும், புதன்கிழமை காலை 08.30 மணியிலிருந்து மாலை 05.30 மணிவரையும் நெல்லியடிப் பிரதேசத்தின் ஒரு பகுதி, வதிரி, அல்வாய்ப் பிரதேசத்தின் ஒரு பகுதி, திக்கம், சோரன்பற்று, புதுக்காடு ஆகிய இடங்களிலும்,
வியாழக்கிழமை காலை 08.30 மணியிலிருந்து மாலை 05.30 மணிவரையும் அச்சுவேலி இடைக்காடு, பத்தமேனி, வளலாய், தொண்டமனாறு வீதிப் பிரதேசம், ஈஞ்சை வைரவர் பிரதேசம், சோரன்பற்று, புதுக்காடு ஆகிய இடங்களிலும் மின் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.