யாழில் 8,500 ஏக்கர் வயல் நிலம் நாசம்

nelயாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த வருடம் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக 8,500 ஏக்கர் வயல்கள் பகுதியளவில் நாசமடைந்துள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட விவசாய அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலே இந்த விடயம் கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்தவருடம் 8,500 ஏக்கர் வயல்கள், 3,500 ஏக்கர் வெய்காயம், 1,011 ஏக்கர் மரக்கறிச் செய்கை மற்றும் 64 ஏக்கர் கிழங்கு உற்பத்தி என்பன பாதிக்கப்படடுள்ளதோடு இதனால் விவசாயிகள் பாரிய நஸ்டத்தை எதிர்நோக்கியிருந்ததாகவும் கலநல அபிவிருத்தி திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

Related Posts