யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியில் தரம் 2இல் பயிலும் மாணவன் ஒருவன், இரண்டு வாரங்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (செவ்வாய்கிழமை) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரியில் தரம் 2இல் பயிலும் சத்தியகரன் அபிகரன் (வயது-7) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
குறித்த மாணவனும் அவனது சகோதரர்கள் இருவரும் வயிற்றோட்டம் காரணமாக கடந்த 10ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கிசிச்சைக்காகச் அனுமதிக்கப்பட்டனர்.
சுமார் 17 நாட்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் 7 வயது மாணவன் நேற்று காலை உயிரிழந்துள்ளதாக மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டது.
மாணவனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மாணவனின் சகோதரர்கள் இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
சகோதரர்கள் மூவரும் உட்கொண்ட முட்டை விஷமாகியதால் ஒவ்வாமை ஏற்பட்டு சுகயீனம் ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் தெரிவிக்கப்படுகின்ற போதும் மரண விசாரணையின் பின்னரே காரணம் தெரியவரும் என வைத்தியசாலை வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றது.