யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமி இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களே குறித்த சிறுமியை நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கடத்தியுள்ளனர்.செம்மணி பகுதியில் வைத்தே குறித்த சிறுமி கடத்தப்பட்டுள்ளார்.பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.