யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் 15 ஆயிரம் பேர் தபால் மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஓகஸ்ட் 03 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு கடந்த 14 ஆம் திகதி வரை கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களின் அடிப்படையில் தபால் மூல வாக்களிப்புக்கு தகுதியானவர்களின் பட்டியல்கள் ஒவ்வொரு மாவட்டங்களிலும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
யாழ். மாவட்டத்தில் 15 ஆயிரம் பேர் தபால்மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்றுள்ளனர். எனினும் கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வாக்களிப்புக்கு தகுதி பெற்றவர்கள் தொடர்பிலான விபரங்கள் இன்னமும் முடிவுறுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் கிளிநொச்சி மாவட்டத்தில் 1861பேர் விண்ணப்பித்துள்ளனர், முல்லை.மாவட்டத்தில் 1939 பேரும் , மன்னாரில் 2613 பேரும் தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பித்துள்ளனர் என்றும் தெரியவருகின்றது.